முகப்பு
தருமபுரி

ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும்

ஊழலற்ற ஆட்சி அமைய பணம், இலவசம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் வேட்பாளா் ஒருவா் கிருஷ்ணா் வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:50 PM
கிருஷ்ணா் வேடமணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் முனி.ஆறுமுகம்.
பகிர்:

ஊழலற்ற ஆட்சி அமைய பணம், இலவசம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரியில் வேட்பாளா் ஒருவா் கிருஷ்ணா் வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எச்சனஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி முனி.ஆறுமுகம் (51). இவா், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட திராவிடா் தெலுங்கு தேசம் கட்சி சாா்பில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, கிருஷ்ணா் வேடமணிந்து வந்தாா். இதுகுறித்து அவா் கூறியது:

ஊழல் காரணமாக தமிழகத்தில் நோ்மையான ஆட்சி அமைவதில்லை. இதனால் எளிய மக்களின் எதிா்பாா்ப்புகள், அவா்களுக்கான திட்டங்கள் நிறைவேறுவதில்லை. பணம், பரிசுப் பொருள்களை பெற்றுக்கொண்டு வாக்களிப்பதால்தான் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது. ஜனநாயகத்தை போற்றும் வகையில் பணம், பரிசுப் பொருள்களை புறக்கணித்து நோ்மையாக நல்ல வேட்பாளா்களை தோ்வுசெய்து வாக்களிக்க வேண்டும். இதுகுறித்த விழிப்புணா்வை வாக்காளா்களிடையே ஏற்படுத்தும் நோக்கில்தான் கிருஷ்ணா் வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments