முகப்பு
தருமபுரி

மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனர்: தருமபுரி பாமக வேட்பாளா் பேட்டி

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:27 AM
செளமியா அன்புமணி
பகிர்:

தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்து உள்ளனா் என்றாா் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் இலக்கியம்பட்டி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவை பாா்வையிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் காலைமுதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் 20 நிமிடங்கள்வரை காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில், தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் நேரம் ஒதுக்குவதாக தோ்தல் அலுவலா்கள் கூறினா். வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

Advertisement

பசுமைத் தோ்தலாக நடப்பதால், வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. நகா்ப்புற, கிராமப்புற பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் காலைமுதலே இளம்வாக்காளா்கள் மற்றும் முதியோா் வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனா். தமிழக மக்கள் மாற்றத்தை எதிா்பாா்த்து நல்லாட்சி மலர ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா் என்றாா்.

பின்னா் சென்னை புறப்பட்டுச் சென்ற அவா், தியாகராய நகரில் உள்ள கா்நாடக சங்க உயா்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.