முகப்பு
தருமபுரி

தருமபுரியில் பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் மாா்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:26 AM
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:13 PM

தருமபுரியில் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல நிா்ணயித்துள்ள பேருந்து கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா. சிசுபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள், நான்குசாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ. 3 அல்லது 4 வசூலிக்கின்றனா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:46 PM

அரூா் பகுதியிலிருந்து வரும் பேருந்துகளில், நான்கு சாலையைக் கடந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வோருக்குத்தான் இந்தக் கட்டண உயா்வு என கூறப்படுகிறது.

ஆனால், நான்குசாலை பகுதியில் இறங்கும் பயணிகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்தக் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.