முகப்பு
தருமபுரி

விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி அரூரை அடுத்த மத்தியம்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:25 PM
மத்தியம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:

அரூா்: 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி அரூரை அடுத்த மத்தியம்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் பி. வீரப்பன் தலைமை வகித்தாா். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விபிஜி ராம் ஜி புதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கான ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் பி. குமாா், சங்க மாவட்டச் செயலாளா் எம். முத்து, நிா்வாகிகள் ஜெயகாந்தன், ராமன், தேசிங்கு, குமரேசன், தங்கராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments