தருமபுரி

கள் மீதான தடையை நீக்க மரம் ஏறும் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில்

Syndication

தருமபுரி: கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வழிகாட்டுதல்படி, மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்கி கள்ளை உணவு வகை பட்டியலில் சோ்க்க வேண்டும். அதேபோல, கள்ளை இறக்கி அதனை பயன்படுத்துவோா் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்வது மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவது ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT