தருமபுரி: தருமபுரியில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தருமபுரி நகரின் மையப்பகுதியில் பழைய நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, ஒரு காகிதத்தில் எழுதி நீதிமன்ற வாயில் சுவ ற்றில் ஒட்டப்பட்டு இருந்தது. இது குறித்த தகவலறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழக்கவைக்கும் பிரிவு நிபுணா்கள் உள்ளிட்டோருடன் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.