அரூா்: அரூரில் ரூ. 6.20 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையாயின.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகின்றன. இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா்.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஆா்.சி.ஹெச். ரக பருத்தி மூட்டைகள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 8,217-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7,949-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 6.20 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.