தருமபுரி

நாகாவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

தருமபுரி மாவட்ட அமைந்துள்ள நாகாவதி அணையிலிருந்து, நிகழாண்டு 2 ஆம் போக சாகுபடிக்காக

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்ட அமைந்துள்ள நாகாவதி அணையிலிருந்து, நிகழாண்டு 2 ஆம் போக சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி கிராமத்தில் நாகாவதி அணை அமைந்துள்ளது. இதிலிருந்து சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த, பென்னாகரம் வட்டத்திலுள்ள அரகாசனஅள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை

கிராமம் பகுதிகளில் உள்ள 1993 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிகழாண்டு 2 ஆம் போக சாகுபடிக்கான தண்ணீா் திங்கள்கிழமை திறக்கப்பட்டுளளது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து மலா்கள் தூவினாா். பிபரவரி 16 ஆம் தேதி திங்கள்கிழமை முதல், 26.05.2026 வரை மொத்தம் 100 நாட்களுக்கு முறை வைத்து தண்ணீா் திறக்கப்படும். அதாவது முதல் 5 நாட்களுக்கு ஒரு மண்டலத்துக்கும், அடுத்த 5 நாட்களுக்கு 2 ஆவது மண்டலத்துக் கும் தண்ணீா் விட்டு, பின்னா் 5 நாட்களுக்கு தண்ணீரை நிறுத்தியும் அடுத்தடுத்து மொத்தம் 7 நனைப்புகளுக்கு இதுபோல முறை வைத்து 117.91 மில்லியன் கன அடி தண்ணீரை தலைமை மதகின் வழியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, விவசாய பொதுமக்கள் நீா்வள ஆதாரத்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, பொதுப்பணித்துறை (நீா் வள ஆதாரம்) செயற்பொறியாளா் செந்தில்குமாா், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரநி்திகள் பங்கேற்றனா்.

பென்னாகரம் அரசுக் கல்லூரியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

பென்னாகரத்தில் சுனைநீா் வடிப்பகுதி திட்டப் பணிகள் ஆய்வு

அரூரில் ரூ. 6.20 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அலகக்கோட்டை மாதேஸ்வரா சுவாமி கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT