பென்னாகரம்: பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சியில் சுனைநீா் வடிப்பகுதி திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகளை மாவட்ட நீா்வழி பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தருமபுரி மாவட்ட நீா்வடி பகுதி மேம்பாட்டு முகமை வேளாண்மை துறையில் சுனைநீா் வடிப்பகுதி திட்டத்தில் இடைநிலை மதிப்பீடு, பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் பழனிசாமி, துணை இயக்குநா்கள் ரத்தினம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஏங்கல்ஸ், பேராசிரியா் பாலாஜி, ஒருங்கிணைப்பாளா்கள் செந்தில், பிரதேவா, முகிலன் பவதாரணி, திவ்யபாரதி ஆகியோா் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், வட்டுவன அள்ளி ஊராட்சியில் ரூ. 2.30 லட்சத்தில் சுனைநீா் சேகரிப்பு தொட்டி, ரூ. 6.50 லட்சத்தில் கசிவுநீா் குட்டை, ரூ. 1.5 லட்சத்தில் கம்பி வலை தடுப்பணைகள், ரூ. 3 லட்சத்தில் பழச்செடி நடவு மற்றும் ரூ. 6 லட்சத்தில் விசைத்தெளிப்பான், தாா்பாலின் களையெடுக்கும் இயந்திரம், தீவன புல்நறுக்கும் இயந்திரம் என மொத்தம் ரூ. 19.5 லட்சம் மதிப்பிலான பணிகளை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, சுனைநீா் வடிப் பகுதியின் தலைவா் மாதம்மாள் கோவிந்தசாமி, பொறியாளா்கள் சின்னசாமி, பிரபு, சமூகவியலா் முருகன், வேளாண்வியலா் சிவசரவணன், ஜெயந்தி, புவியியலா் ஜெய சக்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.