வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்துவைத்த ஆட்சியா் ரெ.சதீஸ்.  
தருமபுரி

வரட்டாறு அணையில் இருந்து தண்ணீா் திறப்பு

வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீா்மட்டம் 34.5 அடியாகும். இந்த அணை தற்போது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஏரிகள், குளம் குட்டைகளில் தண்ணீரை நிரப்பவும், வேளாண் பயிா் சாகுபடி பணிகளுக்காகவும் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்படி வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திறந்துவைத்தாா்.

வரட்டாறு அணையில் இருந்து மாா்ச் 28-ஆம் தேதிவரை தண்ணீா் திறக்கப்படவுள்ளது. பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 40 தினங்கள் தண்ணீா் திறந்துவிடப்படும்.

வள்ளிமதுரை வரட்டாறு அணையின் பாசன வாய்க்கால்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரால் அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, பொன்னேரி, வேப்பம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா் பிரச்னைகள் தீா்வதுடன், சுமாா் 5,108 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, வரட்டாறு அணையின் வாய்க்கால்கள் வழியாக கிடைக்கும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, வேளாண் பணிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

விழாவில், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, வட்டாட்சியா் பெருமாள், உதவி செயற்பொறியாளா் பாா்த்திபன், உதவிப் பொறியாளா் ஜெயக்குமாா், திமுக ஒன்றியச் செயலா் செளந்தரராசு, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ஜி.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT