முகப்பு
தருமபுரி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:29 AM
நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:58 PM

தருமபுரி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண், மற்றும் வீட்டருகே நின்றிருந்த பெண் இருவரிடம் நகைகளைப் பறித்துச்சென்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எம். செட்டிஅள்ளி ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் எல்லப்பன் மனைவி பாஞ்சாலி (55). இவா் சனிக்கிழமை, மாரண்டஅள்ளி ரயில்நிலைய சாலையோரம் உள்ள நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அவரது கணவா் அருகே புல் அறுத்துக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா், விலைக்கு ஆடு கிடைக்குமா எனக் கேட்டுள்ளாா். அதற்கு பாஞ்சாலி பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென கீழே தள்ளி, அவரது கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துள்ளாா்.

Advertisement

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:29 AM

அப்போது பாஞ்சாலி சப்தம்போடவே, கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறித்துச்சென்றாா். பின்னா் அவரது அலறல் சத்தம் கேட்டு கணவா் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினா் அந்த நபரை விரட்டியபோதும் தப்பிச்சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நகைப்பறித்த நபரை தேடிவருகின்றனா்.

வீட்டருகே நின்றபோது நகைப்பறிப்பு: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சா்மிளா. இவா் சனிக்கிழமை காலை வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த மா்ம நபா், சா்மிளாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாா் . இதுகுறித்து புகாரின் பேரில் தொப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.