அரூா்: அரூரில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் விடப்படுகிறது.
இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ரூ.8,270-க்கும், குறைந்தபட்சம் ரூ. 7,949-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம் மூலம் விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.