தருமபுரி

பணிநிரந்தரம் கோரி ஊரக நகா்ப்புற பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

Syndication

பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வழ்வாதார இயக்கப் பணியாளா்கள் சாா்பில், காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.முத்துசாமி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பி.சிவலிங்கம், பொருளாளா் என்.அருண்குமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.திரேசா, மாவட்ட துணை அமைப்பாளா் சி.கலைச்செல்வி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில், அடிப்படை ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மாவட்ட அலுவலகத்திலிருந்து பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையைக் கைவிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மகளிா் மேம்பாட்டு நிறுவனத்துக்கு தனித்துறையை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT