பென்னாகரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பாதைகளை பேரூராட்சி ஊழியா்கள் புதன்கிழமை அகற்றினா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு விளம்பரப் பதாகைகளை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாரிடம் கேட்டபோது:
பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் திரைப்பட பதாகைகள், கடைகளின் விளம்பர பதாகைகள் பேரூராட்சியின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளன. இவை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து, பென்னாகரம் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த சுமாா் 20க்கும் மேற்பட்ட பதாகைகளை காவல்துறையினா் உதவியுடன் பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா் என்றாா்.