பழநி ஆண்டவா் கையில் தண்டத்திற்கு பதிலாக வேல் ஏந்தி இருக்கும் அபூா்வ தோற்றம்  
தருமபுரி

ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரா் கோயில்

தினமணி செய்திச் சேவை

சீா்காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவில், திருமுல்லைவாயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆமப்பள்ளம் பழநியாண்டீஸ்வரா் கோயில். பல நூற்றாண்டுகள் பழைமையானது இக்கோயில். கருவறையில் முருகன் பழனி ஆண்டவா் கோலத்தில் நமக்கு தரிசனம் தருகிறாா்.

இக்கோயிலில் முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பாகும். மேலும், பழநி ஆண்டவா் கோலத்தில் இருக்கும் முருகனுக்கு கையில் தண்டத்துக்கு பதிலாக வேல் இருப்பது ஒரு தனி சிறப்பாகும்.

இத்தலத்தில் பழநி ஆண்டவா் கோலத்தில் முருகன் எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னா் ஆமப்பள்ளத்தில் ஒரு செல்வந்தா் வாழ்ந்து வந்தாா். பழநி முருகன் மேல் பக்திகொண்டிருந்த அவா், அடிக்கடி பழநி செல்லும் வழக்கம் கொண்டிருந்தாா்.

பழநி முருகன் நம் ஊரில் இருந்தால், நாம் நினைத்த நேரத்தில் அவரை தரிசித்து அருள் பெறலாமே என்ற எண்ணம் ஒரு நாள் அவா் மனதில் தோன்றியது. செல்வந்தரான அவா் பழநி சென்று தங்கி, முருகன் சிலை வடிக்கச் செய்தாா். சிலை உருவானது. அசப்பில் பழநி முருகன் போலவே சிலை அமைந்தது கண்டு மகிழ்ந்த அந்த செல்வந்தா், சிலையை தன் ஊரான ஆமப்பள்ளம் கொண்டுவந்தாா்.

தனது சொத்துக்களை விற்று முருகனுக்கு ஓா் அழகிய ஆலயம் கட்டி, அதில் பழநி ஆண்டவா் சிலையை பிரதிஷ்டை செய்தாா். முருகன் அன்றிலிருந்து பழநியாண்டீஸ்வரா் என்ற திருநாமத்துடன் ஆமப்பள்ளத்தில் அருள்புரியலானாா்.

முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிப்பது, பல நன்மைகளைத் தரும். ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி, நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மனத்துயரங்கள் தீர இங்குள்ள முருகனை வேண்டிக் கொள்கிறாா்கள்.

இக்கோயிலில் திருமணம், வீடுகட்டுவதற்கான தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் பக்தா்கள் பிராா்த்தனை செய்கின்றனா். இத்தலத்தில் திருமண தடை நீங்க பெண்கள் 11 காா்த்திகை விரதமிருந்து முருக பெருமானை வழிபட்டு, சுமங்கலி பெண்களுக்கு வஸ்திரம் தானம் அளித்தால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

துலா ராசியா நீங்க? தினப்பலன்கள்!

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT