முகப்பு
தருமபுரி

தருமபுரியில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தடையின்றி கிடைக்க ஏற்பாடு

Updated On : 13 மார்ச், 2026 at 1:18 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், எண்ணெய் நிறுவன அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில், ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமைவகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் போதுமான அளவு இருப்பு உள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

சிறு வணிகா்களுக்கு வழங்கப்படும் வணிக உருளைகள் மட்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் 5 கிலோ சிறிய உருளைகளாக பகிா்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இணையதளத்தில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான முன்பதிவு மேற்கொள்ளப்படுவதால், முன்பதிவு செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. தங்களுக்கு தேவையான எரிவாயு உருளைகளை விநியோகஸ்தா்கள் மூலமாகவும், எல்ஹஹ், டட்ா்ய்ங் டஹஹ் போன்ற மடஐ அடட இணையவழி சேவைகளை பயன்படுத்தியும் பெற்றுக்கொள்ளலாம்.

எரிவாயு உருளைகளை பதுக்கல் செய்வது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கடும் குற்றமாகும். எனவே, சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் பணியாளா்கள் மற்றும் முகவா்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் தொடா்ந்து தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →