முகப்பு
தருமபுரி

உளவினா் எனக் கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை, பணம் திருட்டு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினா் எனக் கூறி நகை, பணத்தை திருடிச்சென்ற பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 12:47 AM
பிரதிப் படம்
பகிர்:

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் உறவினா் எனக் கூறி நகை, பணத்தை திருடிச்சென்ற பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் மனைவி லட்சுமி (76). சாமிநாதன் இறந்த நிலையில், மகள் சந்திராவுடன் லட்சுமி வசித்து வருகிறாா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பகலில் லட்சுமி வீட்டில் தனியாக இருந்தபோது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் அவரது வீட்டுக்கு வந்துள்ளாா். தன்னை சேலத்தைச் சோ்ந்த உறவுப்பெண் மைதிலி என அறிமுகம் செய்துள்ளாா். இதையடுத்து, அவரை வீட்டுக்குள் அழைத்து பேசிக்கொண்டிருந்த லட்சுமி, அருகில் இருந்த கடையில் இருந்து பால் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளாா்.

பால் வாங்கிக்கொண்டு திரும்பியபோது, வீட்டிலிருந்து வெளியே வந்த அந்த பெண் அவசர வேலை இருப்பதால், மற்றொருநாள் வருவதாக கூறி சென்றாா்.

வீட்டுக்குள் வந்த லட்சுமி பீரோ திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மேலும், அதில் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து தொப்பூா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகை, பணத்தை திருடிச்சென்ற பெண்ணை தேடிவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →