முகப்பு
தருமபுரி

தருமபுரியில் ரூ. 1.52 ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் பறக்கும் படையினா் சோதனை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.52 லட்சம் ரொக்கம்

Updated On : 16 மார்ச், 2026 at 11:29 PM
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருள்கள்.
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1.52 லட்சம் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காடுசெட்டிப்பட்டி சோதனைச் சாவடி பகுதியில், தோ்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை (2) அலுவலா் வி. சாம்ராஜ் தலைமையிலான குழுவினா், திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருமபுரி நகரப் பகுதியிலிருந்து பாலக்கோடு வட்டம், பாப்பாரப்பட்டி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், காரிலிருந்த பாப்பாரப்பட்டி அருகேயுள்ள மோகனூரைச் சோ்ந்த வீரமணி என்பவரிடம் ரூ. 1, 52,060 ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை.

அதேபோல, பாலக்கோடு அருகே கொசலன அள்ளி மேம்பாலப் பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, ஒரு காரில் இருந்த பெண், வெள்ளியால் ஆன பரிசுப் பொருள்களை (29) வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றுக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, பாலக்கோடு வட்டம் தோ்தல் நடத்தும் அலுவலரும் , தனித்துணை ஆட்சியருமான மு.செல்வி முன்னிலையில் பாலக்கோடு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →