முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 6 மே 2026, 2:28 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 12 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் வெயில் வழக்கம்போல வாட்டி வந்தது. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்தது. இரவு பல்வேறு இடங்களில் பரவலாக இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. பென்னாகரத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல மாரண்டஅள்ளியில் 2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தின் திங்கள்கிழமை சராசரி மழையளவு 1.56 மி.மீ. பதிவாகியிருந்தது. அதேபோல செவ்வாய்க்கிழமை மாவட்டத்தின் வெப்ப நிலை அளவு 96.8 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.