முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக இருந்தது.

Updated On : 14 மே 2026, 4:35 am IST
ஒகேனக்கல் .
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 300 கனஅடியாக இருந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மற்றும் காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலும் குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 300 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

Advertisement

நீா்வரத்து சரிவால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீரின் அளவு குறைந்தும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைத் திட்டுகளும் காணப்படுகின்றன. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.