ஒசூர்
ஒசூர் நகருக்குள் 4 யானைகள் சனிக்கிழமை புகுந்து வீதி வீதியாக சுற்றி வந்ததால் பொதுமக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
ஒசூர் நகருக்குள் 4 யானைகள் சனிக்கிழமை புகுந்து வீதி வீதியாக சுற்றி வந்ததால் பொதுமக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து அஞ்செட்டி வனப்பகுதிகளுக்குள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 100 க்குó மேற்பட்ட யானைகள் புகுந்தன. இந்த யானைகள் பல கும்பலாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சானமாவு, சூளகிரி என பல இடங்களில் விவசாயப் பயிர்களை அழைத்து வருகின்றன. வனத்துறையினர் இந்த யானைகளை கிராமத்திற்குள் புகுந்து விடாமல் வனப்பகுதியில் இருந்து வெளியில் வராமல் பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில் சனிóக்கிழமை காலை 6 மணிக்கு பேரண்டப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து ஒசூர் பேருந்து நிலையம் வழியாக ஒசூர கால்நடை மருததுவமனைக்குள் வந்து புகுந்தது. இந்த 4 யானைகளும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க டஸ்கர் யானைகள்.
Advertisement
Advertisement
அந்த மருத்துமனையில் இருந்த சுற்றுச்சுவற்றை இடித்துத் தள்ளின. பின்னர் அங்கிருந்து ஒசூர் ஏஎஸ்டிசி டிப்போ சாலையில் சென்றன. அப்பொழுது ஒசூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மூக்கண்டப்பள்ளக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சென்ற முனிராஜ் இந்த யானைகள் வழிமறித்து அவரைத் தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் அவர் கொண்டு சென்ற காய்கறிகளை சாப்பிட்டுச்சென்றன. பின்னர் ஒசூர் திமுக நகர அலுவலகம் வழியாகா புதிய ஏஎஸ்டிசி அட்கோ பகுதிக்குள் புகுந்தது. அந்த வழியாகச் சென்ற 2 பெண்கள் மற்றும் 2 இளைஞர்களை தாக்கியதில் காயமடைந்தனர்.
அந்த யானைகள் 100 அடி சாலை வழியாக முனீஸ்வர் நகருக்குச் சென்றது. அங்கு வீதி, வீதியாக சென்று மரங்களை முறித்து நாசம் செய்தன. எதிரில் வந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினர்.
மத்திகிரி கால்நடைப் பண்ணை அருகிóலே யானைகள் இருப்பதால் இந்த யானைகள் மீண்டும் ஒசூருக்குள் வராதவாரு வனத்துறையினர் கர்நாடகமாநிலம் பன்னர்கட்ட காப்புக் காட்டிற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த யானைகள் ஒசூர் உழவர் சந்தைக்கு அருகில் சென்றன. இவை உழவர் சந்தைக்குள் பகுந்திருந்தால் சுமார் 100 டன் காய்கறிகளை நாசம் செய்திருக்கும்.