கிருஷ்ணகிரி

ஒசூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ஆய்வு

தினமணி

ஒசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, முன்மாதிரி மருத்துவமனையாக உருவாக்குவது குறித்த ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஒசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் தில்லியில் உள்ள என்.ஏ.பி.எச். என்ற அமைப்பு சார்பில் மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, முன்மாதிரி மருத்துவமனையாக உருவாக்குவது குறித்த ஆய்வு மத்திய சுகாதாரத் திட்ட இயக்குநர் பூஷன், தமிழக சுகாதார இயக்குநர் குழந்தைவேலு, கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினர், ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து காவல் நிலையத்திற்கு பின்புறம் செயல்படாமல் உள்ள அவசரச் சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டனர். அப்போது, அந்தக் குழுவிடம் இந்த மையத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவ அலுவலர் பொன்ராஜ் கோரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT