கிருஷ்ணகிரி

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தினமணி

இந்துக் கோயில்களில் சுவாமி தரிசனக் கட்டணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
 கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டத் தலைவர் யுகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மஞ்சுநாத், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோயில்களில் வசூலிக்கப்படும் அர்ச்சனை கட்டணம், விஐபி கட்டணம், குளியல் கட்டணம், சிறப்பு ஒரு கால பூஜை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். கேரள மாநிலம்போல தமிழகத்திலும் கோயில்களில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT