கிருஷ்ணகிரி

ஜெகினிகொல்லை பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

DIN

பர்கூர் அருகே உள்ள ஜெகினிகொல்லை பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகினிகொல்லை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி ஜூன் 25- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுத்தி புண்யாவாசனம், கரிகோல உற்சவம், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை காலையில் மங்கள இசை, சுப்ரபாதம், சுத்தி புண்யாவாசனம், இரண்டாம் கால கலச பூஜை ஹோமம், மூல மந்திர ஹோமம், உபசார பூஜை, நேவேதியம், மங்கள ஆர்த்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் கோபுரக் கலத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடரமண சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை விழாக் குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT