கிருஷ்ணகிரி

கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றும் பணி விரைவில் நிறைவு பெறும் என மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, போகனப்பள்ளி சந்திர மௌலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலம், படேதலாவ் ஏரி கால்வாய் பகுதி, திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் புதன்கிழமை பார்வையிட்டார்.
 மரங்களை வேரோடு அகற்றுவதோடு, மீண்டும் அந்த இடத்தில் துளிர் வருவதைத் தடுக்கும் வகையில் மருந்து தெளித்து முற்றிலும் அழித்துவிட வேண்டும் என அப்பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலர்களை ஆட்சியர் அவர் அறிவுறுத்தினார்.
 அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்றும் பணி விரைவில் நிறைவு பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT