கிருஷ்ணகிரி

குடிநீர்த் திட்டப் பணிகள்: ஆட்சியர் அறிவுரை

DIN

குடிநீர்த் திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அறிவுறுத்தியுள்ளார்.
கடும் வறட்சியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
அதன்படி, பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், பாலிநாயனப்பள்ளி, ஆஞ்சூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள், அங்கன்வாடி மையங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்ட உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் சேகர், சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT