கிருஷ்ணகிரி

சேலத்தில் மார்ச் 27-இல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு

தினமணி

ஐடிஐ தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆள் சேர்ப்பு முகாம், சேலத்தில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: ஐடிஐ தேர்ச்சி பெற்ற தொழிற்பழகுநர் பயிற்சி பெற தயாராக உள்ளவர்கள், இறுதியாண்டு தேர்வு எழுதவுள்ள பயிற்சியாளர்களுக்கு கோவை மண்டல அளவில் தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வு முகாம் சேலம் ஏற்காடு சாலை, கோரிமேடு என்னுமிடத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மார்ச் 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
 இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி தனியார், அரசு பொதுத் துறை தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
 பயிற்சிக் காலத்தில் நிறுவனத்தினரால் ஒவ்வொரு மாதமும் ரூ.8,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்தப் பயிற்சியை முடித்து தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசால் என்.ஏ.சி. சான்றிதழ் வழங்கப்படும். இச் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முன்னுரிமை தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
 எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் தகுதியுள்ளவர்கள் பங்கேற்று பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT