கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதன்கிழமை இரவு 11 மணியளவில் தருமபுரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் செ.முனிராஜ் (32), தனது நண்பருஹடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது  நண்பர் சாமியாபுரம் பகுதியை ச் சேர்ந்த  தீர்த்தகிரி (23), பலத்த காயத்துடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்  பதிவு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செங்கோடனை(46) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT