கிருஷ்ணகிரி

கிராமங்களில் நிலவேம்பு கஷாயம் வழங்கிய கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ

DIN

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனது தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் நிலவேம்பு கஷாயங்களை டி. செங்குட்டுவன் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூவத்தி, கொடுகூர், வெலகலஅள்ளி, வெங்கிலிகானப்பள்ளி, சோக்காடி, பாலகுறி, சின்ன பெல்லாராம்பள்ளி, இட்டிக்கல் அகரம், மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, காமராஜ் நகர், கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், திமுக மாவட்டஇளைஞரணி துணை அமைப்பாளர் அமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் மையத்தில் வாகனயோட்டிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT