திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சசிகலா இன்று சந்தித்தது குறித்து...
தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சசிகலா இன்று (மார்ச் 10) சந்தித்தார்.
இதில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இருவரும் சேர்ந்து திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைப்பது குறித்துப் பேசியதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சசிகலா இன்று (மார்ச் 10) சென்று அவரை சந்தித்தார்.
Advertisement
Advertisement
இந்த சந்திப்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக மிகப்பெரிய கூட்டணியாக உள்ள நிலையில், இந்த இரு கட்சிகளும் இல்லாத கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசியதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்த சசிகலா, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதிதாக கட்சித் தொடங்கினார்.
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களுடன் கொடியை அறிமுகம் செய்தார். எனினும் கட்சியின் பெயரை பின்னர் அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.
இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்காத நிலையில், ராமதாஸை இன்று சசிகலா சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
An alliance without DMK and AIADMK Sasikala meets Ramadoss
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.