கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் பழுதான ரத்த பரிசோதனை கருவி: நோயாளிகள் அவதி

DIN

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவி பழுதடைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய் குறிகள் தொடர்பான ஆய்வகப் பரிசோதனை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பரவலாக டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில், வட்டார மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவி செயல்படாமல் இருப்பது நோயாளிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போச்சம்பள்ளி அரசு தலைமை மருத்துவர் கந்தசாமி கூறியது:
தேன்கனிக்கோட்டை மருத்துவமனையிலிருந்து பரிசோதனை கருவி கொண்டு வந்ததிலிருந்தே பழுதாகியுள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் அசோக்குமார் கூறியது:
காய்ச்சலைக் கண்டறிய கருவிக்கு ஏற்ப மருந்துகள் மாறுபடும். பழுதாகியுள்ள கருவியில் பயன்படுத்த வேண்டிய தகுந்த மருந்து கிருஷ்ணகிரியிலிருந்து போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படும். மேலும், புதிய கருவி விரைவில் வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT