கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒசூர் அருகே கர்நாடக எல்லையை முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒசூர் அருகே கர்நாடக எல்லையை முற்றுகையிடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ்மாறன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மூக்கண்டபள்ளியில் இருந்து ஊர்வலமாக கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளியை நோக்கிச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.சிலர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அக் கட்சியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 160 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால், ஒசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.