கிருஷ்ணகிரி

30 மாணவ, மாணவியர்களுக்கு காமராஜர் விருது அளிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 30 மாணவ, மாணவியர்களுக்கு காமராஜர் விருதை மாவட்ட  ஆட்சியர் சி.கதிரவன் திங்கள்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனித் திறன்களுக்கு காமராஜர் விருது, ரொக்கப் பரிசு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2016-17-ஆம் கல்வி ஆண்டில் தமிழ் வழியில் கல்விச் செயல்பாடுகள் உள்ளிட்ட தனித் திறன்கள் உடைய மாணவ, மாணவியர் மாவட்டத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியர், 12-ஆம் வகுப்பு பயிலும் 15 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.  
தேர்வு செய்யப்பட்ட 30 மாணவ, மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார். 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்,  12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.4.50 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுப்பிரமணியன், பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT