நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி சாவு
கிருஷ்ணகிரி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் விவசாயி உயிரிழந்தார்.
குருவிநாயனப்பள்ளி சாரகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் த.மதியழகன்(30). விவசாயியான இவர், ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப் பகுதியில் நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு தனது நண்பர் தல்லத் (26) என்பவருடன் வேட்டைக்கு செல்ல முற்பட்டார்.
அப்போது, ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததில் அவரது இடதுபுற கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நிகழ்விடத்திலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.