கிருஷ்ணகிரி

பழைய போச்சம்பள்ளியில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

DIN

பழைய போச்சம்பள்ளியில்  மின் மோட்டார்களை பழுது நீக்கி குடிநீர் விநியோகிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழையபோச்சம்பள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர்த் தேவைக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியும், இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு ஆழ்துளைக் கிணறுகளிலும் மின்மோட்டார் பழுது ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதில்லை.
மேலும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து வாரத்துக்கு மூன்று நாள்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் இப்பகுதி மக்களுக்குப் போதுமானதாக இல்லை என்பதால் லாரிகளுக்குப் பணம் கொடுத்து நீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மக்களின் நலன் கருதி மின்மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT