கிருஷ்ணகிரி

கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

DIN

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் முருகன், செயலர் இளவரசன் உள்ளிட்டோர் அளித்த மனு: கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, மாவட்ட அரசு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தனியார் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், அரசு கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் என 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த கல்வி நிறுவனங்களுக்கு தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கல்வி நிறுவனங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால், ஒரே பேருந்தில் 150-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் நிலை உள்ளது.
எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT