கிருஷ்ணகிரி

கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

DIN

ஆணவப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ஒசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
ஒசூரில் காதல் திருமணம் செய்த நந்தீஸ், சுவாதி ஜோடி பெண்ணின் உறவினர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒசூரில் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒசூரில் பெங்களூரு தேசிய சாலையில் நடைபெற்ற மறியலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் கனியமுதன் தலைமை தாங்கினார். மண்டல செயலர் நந்தன் முன்னிலை வகித்தார். தகவல் அறிந்த ஒசூர் நகரப் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஒசூர்-பெங்களூரு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT