கிருஷ்ணகிரி

டீசல் விலையை இரு மாதங்களுக்கு  ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்: ரிக் உரிமையாளர்கள் கோரிக்கை

DIN

டீசல் விலையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,  கிருஷ்ணகிரியில் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர்,  முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ரிக்  உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஸ், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு மணி நேரத்துக்கு 100 லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை ஏற்றத்தால் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதால், கட்டணமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டீசல் விலையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT