கிருஷ்ணகிரி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

DIN

நாகரசம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்  ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை மிதிவண்டி பேரணி நடத்தினர் .
போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி அருகேயுள்ள நாகரசம்பட்டி பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் பங்கேற்றுள்ள மாணவர்கள், பிளாஸ்டிக்  பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடத்தினர். 
இதில்  பிளாஸ்டிக் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த பாதகைகளை ஏந்தியவாறு,  துண்டுப் பிரசுரங்கள், துணிப்பைகளை வழங்கி பொதுமக்கள் மற்றும் கடைகளில் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.  நாகரசம்பட்டி அரசுப் பள்ளி முன்பிருந்து தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி செல்லம்பட்டி வழியாக வீரமலை என்.எஸ்.எஸ். முகாம் நடைபெறும் இடம் வரையில்  நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் வீரமலை பள்ளித் தலைமையாசிரியர் குமரேசன், ஆசிரியர்கள் ஐயப்பன்,அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பெரமன் செய்திருந்தார். நிறைவில் உதவித் திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT