கிருஷ்ணகிரி

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்: சோபா சுரேந்திரன்

DIN

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பாஜக தொண்டர்களை அந்தக் கட்சியின் அகில பாரத இணை பொறுப்பாளர் சோபா சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டப் பொறுப்பாளர் ஜி. பாலகிருஷ்ணா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர்கள் கா. நாகராஜ், ஆர். நந்தகுமார், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்டப் பொறுப்பாளர் சி. நரசிம்மன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஹரி கோட்டீஸ்வரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி. அசோகன், சிறுபான்மை அணி துணைத் தலைவர் முனைவரி பேகம், மாவட்டத் தலைவர் கே.முனிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில், பாஜக அகில பாரத இணை பொறுப்பாளர் சோபா சுரேந்திரன் பேசியது:
உலகில் முதன்மை கட்சியாக பாஜக உள்ளது. இருப்பினும், கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.
திரிபுரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்ததைப் போல கேரளம், தமிழகத்தில் பாஜக வெற்றி பெற வேண்டும் என விரும்புகின்றனர். 
பாஜகவில் அனைத்து சாதியினரும், மதத்தினரும் உறுப்பினராக அதாவது, ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இத்தகைய கருத்தில்தான் காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப்பட்டது.  இதுவரையில் பாஜகவில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைப் போதுமானதாக இல்லை. உறுப்பினர்களின் சேர்க்கையில், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தில்லியிலிருந்து அமித்ஷா நேரடியாகக் கண்காணிக்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும். அதிமுக, திமுக போன்ற மாற்றுக் கட்சியினரை பாஜகவில் சேர்க்க வேண்டும். கிராமங்களில் உள்ள பாஜகவினர் தலைமை பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் 200 பாஜக உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவை முதன்மைக் கட்சியாக மாற்றி தாமரை மலரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT