கிருஷ்ணகிரி

ரூ.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்: இந்தியன் வங்கி இலக்கு

DIN


நிகழாண்டு ரூ.5 லட்சம் கோடிக்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி பொதுமேலாளர் டி.தேவராஜன் தெரிவித்தார்.
இந்தியன் வங்கியின் 113-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஒசூர் கால்நடைப் பண்ணையில் 113 மரக்கன்றுகள் நடும் விழா, கிளை திறப்பு விழா, வீட்டு கடன் வழங்கும் கண்காட்சி ஒசூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் டி.தேவராஜ் பேசியது:
கடந்தாண்டு ரூ.4.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.நிகழ் ஆண்டு ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 6 நாள்களில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். வீட்டு கடன், வாகன கடன், கல்விக் கடன், தொழில்சாலை தொடங்க கடன் என அனைத்து விதமான கடனையும் விரைவாக வழங்கப்படும் என்றார். ராயக்கோட்டை சந்திப்பில் நடைபெற்ற வீட்டுக் கடன் வழங்கும் கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு ஒசூர் கால்நடைப் பண்ணையில் மரக் கன்றுகளை நட்டுவைத்தார். 
விழாவில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன், துணை மண்டல மேலாளர் அனந்தராமன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் பாஸ்கர், ஒசூர் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் பெ.பசுபதி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT