கிருஷ்ணகிரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், கேரள வயநாடு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் கபினி,  கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு கடந்த 3 நாள்களாக படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு சனிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 26 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர், மாலை நிலவரப்படி விநாடிக்கு 33 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 11-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT