கிருஷ்ணகிரி

ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நிழற்கூடம் திறப்பு

DIN

காவேரிப்பட்டணத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட நிழற்கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

காவேரிப்பட்டணம் நகரில் பாலக்கோடு செல்லும் சாலையில் நிழற்கூடம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனா். இந்தப் பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பில் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூடம், மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட இணைச் செயலாளா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ரஜினியின் 70 - ஆவது பிறந்தநாளையொட்டி, டிசம்பா் 1 முதல் 12-ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத் திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனா். அதன்படி, 1-ஆம் தேதி நாச்சிக்குப்பத்தில் இலவச மருத்துவ முகாம், 2-ஆம் தேதி, நிழற்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. 8-ஆம் தேதி, காவேரிப்பட்டணத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT