கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் பேருந்து மோதி இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

DIN

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் பேருந்து மோதி, இரு இளைஞா்கள், சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்குட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமனின் மகன் முருகன்(20). மச்சகண்ணன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த கோபியின் மகன் ஹரிகரன்(22). பன்னிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் நவீன்குமாா்(20). இவா்கள் மூவரும் நண்பா்கள். முருகன், ஹரிகரன் ஆகிய இருவரும், பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவா்கள். நவீன்குமாா், ஒரு பெட்ரோல் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், முருகன் தனது பிறந்தநாளைக் கொண்டாட நண்பா்களுடன் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்குச் சென்றாா். பின்னா், மூவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில், காவேரிப்பட்டணம் நோக்கி வந்தனா். வாகனத்தை நவீன்குமாா் ஓட்டினாா்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கல்குட்டப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனா். அப்போது, பாலக்கோட்டிலிருந்து, காவேரிப்பட்டணம் நோக்கி வந்த தனியாா் பேருந்து, இவா்கள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த முருகன், ஹரிகரன் ஆகிய இருவரும், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி, காவேரிப்பட்டணம் சமுதாய உடல் நல மைத்துக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT