கிருஷ்ணகிரி

கராத்தே போட்டியில் சிறப்பிடம்: ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

DIN

கராத்தே போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப்  பாராட்டு விழா திங்கள்கிழமை 
நடைபெற்றது. 
ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சென்னை தேனாம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். குமிட்டி பிரிவில்  மாணவர்கள் டி.கோகுல்,  டி.எ.அஸ்வந்த், டி.தர்சன்ஸ்ரீ,  பி.பாலாஜி, கே.எஸ்.கல்விச்சுடர்,   வி.சபரிவாசன்,  ஜி.நவின்குமார், ஆர்.தொல்காப்பியன் மற்றும் சி.சிபிராஜ் ஆகியோர் முதலிடமும்,  எம்.சஞ்சய், பி.பார்த்திபன், டி.லட்சுமணன்,  எம்.ஜெயவர்மன், ஆர்.மோனிஷ், எஸ்.சஞ்சய் மற்றும் எ.கெளதம் ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
கட்டா பிரிவில் ஆர்.மோனிஷ்,  ஜி.நவின்குமார், சி.வானிலவன் மற்றும் சி.சிபிராஜ் ஆகியோர் முதலிடமும்,  தர்சன்ஸ்ரீ, வி.சபரிவாசன் மற்றும் டி.கோகுல் ஆகியோர் இரண்டாமிடமும் . கல்விச்சுடர், அஸ்வந்த்,  ஜெயவர்மன், சஞ்சய், கெளதம், லட்சுமணன், பாலாஜி, சஞ்சய் மற்றும், பார்த்திபன் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.  போட்டியில் வெற்றிபெற்று சான்றிதழ், பரிசு பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் ஊ.சுப்பிரமணி ஆகியோரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சீனி.கலைமணி சரவணக்குமார், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT