கிருஷ்ணகிரி

சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம்

DIN

சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி 45-ஆம் ஆண்டு திருக்கல்யாண விழா கடந்த 18-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 19-ஆம் தேதி கருட வாகன உற்சவமும், 20-ஆம் தேதி சேஷ வாகன உற்சவமும், 21-ஆம் தேதி குதிரை வாகன உற்சவமும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பிப். 22-ஆம் தேதி சுவாமி கோவிந்தராஜுலு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்களுடன், சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இரவில் ரத உற்சவமும், இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றன. பிப். 23-ஆம் தேதி வசந்த உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT