கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகேநீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலப்பு?

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்செட்டி நாட்ராம்பாளையத்தை அடுத்த பூமரத்துக்குழி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிய மர்ம நபர் தண்ணீரில் ஏதோ கலந்ததாகவும், அதை பார்த்த அப் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் பொதுமக்களிடம் தெரிவிப்பதற்குள் அந்த மர்ம நபர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்செட்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு புதிய நீரை விநியோகிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT