கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 1,66,777 புத்தகங்கள் விநியோகம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 1,66,777 விலையில்லா  பாடப் புத்தகங்கள் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடைவிடுமுறைக்கு பின்  அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி  ரோஜா பூக்கள்,  இனிப்புகளை வழங்கி மாணவிகளை வரவேற்றார். இதையடுத்து, பள்ளியில் ஆசிரியர்களின் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரத்தை   அவர் இயக்கி வைத்து,  மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்களை  வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரிகேஜி  ஆங்கில வகுப்புக்கு 13 புத்தகங்கள்,  எல்கேஜிக்கு 66 புத்தகங்கள்,  யூகேஜிக்கு 76 புத்தகங்கள் வழங்கப்பட்டன.  மேலும்,  ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 6,271,   இரண்டாம் வகுப்புகளுக்கு 12,065,  3-ஆம் வகுப்புகளுக்கு 15,001,   4-ஆம் வகுப்புகளுக்கு 14, 877,   5 - ஆம் வகுப்புகளுக்கு 15,355,   6-ஆம் வகுப்புகளுக்கு 7,349,   7-ஆம் வகுப்புகளுக்கு 18,648, 8-ஆம் வகுப்புகளுக்கு 17,421,  9-ஆம் வகுப்புகளுக்கு 14,921,  10-ஆம் வகுப்புகளுக்கு 18,031,  11-ஆம் வகுப்புகளுக்கு 12,604,  12-ஆம் வகுப்புகளுக்கு 12,110 புத்தகங்கள் என மொத்தம் 1,66,777 விலையில்லா புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. 
அப்போது,  பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்,  பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT