கிருஷ்ணகிரி

பலாத்கார வழக்கு: ஓட்டுநருக்கு 11 ஆண்டுகள் சிறை

DIN

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓட்டுநருக்கு  கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தனியார் நிறுவனத்தில்  பணியாற்றி வந்தார். இவர், கடந்த 9.2.2016 -இல்  அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ஜெகன் (26),  கிராமத்துக்கு செல்வதாகக் கூறி, அந்த இளம்பெண்ணை, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு மாந்தோப்பில் வைத்து பாலியல் பலத்காரம் செய்தார். இதுகுறித்து,  பாதிக்கப்பட்ட பெண் சார்பில் அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெகனை கைது செய்தனர். இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  பெண்ணை தாக்கிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம்,  கொலை மிரட்டல் குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை,  ரூ.1,000 அபராதம் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் குற்றவாளி ஜெகனுக்கு விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.கலையரசி ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT