கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி தொடக்கம்

DIN


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி, ஒசூர்  இடைத் தேர்தலில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், சு.பிரபாகர், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (9) தேர்தல், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான (55) இடைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை நியமனம் செய்யும் பணியானது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மார்ச் 23-ஆம் தேதி (சனிக்கிழமை), கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 1,885 வாக்குச்சாவடிகள், ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 369 வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் பணியாற்ற 9,836 வாக்குச்சாவடி அலுவலர்களை சட்டப்பேரவை தொகுதி வாரியாக ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT